கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்ட இருவர் கைது (Video)
கிளிநொச்சியில் கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்ட இருவரை தருமபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்மடு நகர் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை நடைபெறுவதாக தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்றைய தினம் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை ஊழவனுர் பகுதியிலும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களிடமிருந்து 33 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரம் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 27 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
