திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரால் கைது (Photos)
சங்கிலி திருட்டுடன் தொடர்புடைய இருவர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இருவேறு தினங்களில் தங்கச்சங்கிலிகள் இரண்டு திருடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலிற்கு அமைய நேற்றையதினம் தங்கச்சங்கிலிகளைத் திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிற்கு அமைவாகச் சங்கிலியை விலைக்கு வாங்கிய இருவரும் தருமபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த நால்வரையும் ஏழு நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்.





