சீனாவுக்காக உளவு பார்த்த இருவர் பிரித்தானியாவில் கைது
சீன அரசாங்கத்திற்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் உளவு நடவடிக்கையின் ஒரு நிகழ்வு இதுவென பிரித்தானிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக நான்கு பேர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் நாடாளுமன்ற ஆய்வாளராக பணிபுரிவதாகவும், சீனாவிற்கு எதிரான பிரித்தானிய கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் கொண்ட பல அரசியல்வாதிகளுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இருவரும் அரச இரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
