கொழும்பில் உண்டியல் பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது
கொழும்பில் உண்டியல் பண பரிமாற்று நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பணம் உண்டியலின் ஊடான சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் பெறப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை மற்றும் வெல்லம்பிட்டியை சேர்ந்த 39, 62 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
You My Like This Video
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
