யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் கைது
யாழ்.போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (03.02.2024) இடம்பெற்றுள்ளது.
மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ஏறி வைத்தியசாலைக்குள் உட்புகுந்த இருவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸார் நடவடிக்கை
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் கைபேசிகள் உள்ளிட்டவை திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது எனவும், இவை தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டும் , பொலிஸாரின் விசாரணைகள் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைபவர்கள் , வைத்தியசாலை வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்களை கட்டுப்படுத்த வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
