திருகோணமலையில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது
திருகோணமலை- தம்பலகாமம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியிலுள்ள வீட்டில் கிணறு தோண்டுவதைப் போன்று புதையல் தோண்டிக் கொண்டிருந்த வேளையில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கல் துளைக்கும் இயந்திரத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முள்ளிப்பொத்தானை- சாலியபுர -பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 60 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கந்தளாய் நீதிமன்றில் (13.07.2023) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam