இணையம் வழியாக சிறுமி விற்பனை - பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கைது
இணையம் மூலம் 15வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் ஜூலை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே இருதயநோய் நிபுணர் உட்பட இதுவரை 33க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாலைத்தீவு முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஒருவரும் அடங்குகிறார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தாய், மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவர் மற்றும் ஒரு கப்பலின் கேப்டன் ஆகியோரும் அடங்குவர்.
மூன்று சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு கார் ஓட்டுநர் மற்றும் சிறுமியை பாலியல் ரீதியாக விற்கப் பயன்படும் வலைத்தளத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த 15 வயது சிறுமி இணையம் வழியாக பாலியல் தொடர்பாகப் பல வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 30,000 என மூன்று மாத காலப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளார்.