ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது
அம்பாறையில் பல பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மீட்பு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் சந்தேகநபர்கள் வசம் இருந்து 4 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்தவரெனவும் இவர் மீது ஏலவே 6 பிடியாணைகள் நிலுவையில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை
கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களையும், சான்றுப் பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri