ஆடம்பர வீடுகளை கட்டித்தருவதாக கோடிக்கணக்கான பணமோசடி
வீடுகள் கட்டித்தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 38,770,000 கோடிக்கணக்கான பணமோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் சந்தேகநபர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நம்பிக்கை மோசடி
நிறுவன பணிப்பாளர்கள் போல் நடித்து, வீடுகள் கட்டித்தருவதாக வாக்குறுதியளித்து பணம் பெற்றுக்கொண்டு, ஆனால் வீடுகளை பகுதியளவு மட்டுமே கட்டி முடித்து, நம்பிக்கை மோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

வீடுகள் கட்டித்தருவதாக வாக்குறுதியளித்து சந்தேகநபர்கள் ரூ. 38,770,000 பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 27 வயதும், மற்றொரு சந்தேகநபருக்கு 19 வயதும் ஆகும் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.