நாடாளுமன்றத்தை படம்பிடித்த இருவர் கைது
சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு நாடாளுமன்றத்தை தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த இரண்டு பேரை பொலிஸார் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்
இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் என்பதுடன் மற்றைய நபர் முஸ்லிம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் உடனடியாக மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நாடாளுமன்ற விளையாட்டு மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குள் செல்லும் வழி ஊடாக தியவன்ன ஓயாவின் கரையில் இருந்தவாறு நாடாளுமன்றத்தை ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
எதற்காக இவர்கள் நாடாளுமன்றத்தை ஒளிப்பதிவு செய்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை என்பதுடன் அது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேக நபர்களிடம் இருந்த காணொளி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் நாடாளுமன்றத்தின் பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
