பாதாள உலகக்குழுவிற்கு போலி ஆவணங்களை வழங்கிய இருவர் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து வழங்கிய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலி ஆதன வரி சான்றிதழ்கள், காப்புறுதி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கூரிய ஆயுதங்களையும் இந்த நபர்கள் பாதாள உலகம் குழுவினர்களுக்கு வழங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வைத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் மன்னா சாந்த என அழைக்கப்படும் பாதாள உலகம் குழு உறுப்பினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து ஆதன வரி சான்றிதழ்கள், காப்புறுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும் ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களினால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri