கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது
6 கிலோ 630 கிராம் "குஷ்" போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு விமானப் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இன்று (20) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட "குஷ்" போதைப்பொருளின் பெறுமதி 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து...
கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபர் அம்பாந்தோட்டை கட்டுவான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஆவார்.
அவர் தற்போது கொஸ்கமவில் உள்ள சாலாவ இராணுவ முகாமில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய சந்தேக நபர் 30 வயதான பெண், காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அம்பாறை, மகாஓயாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஆண் சந்தேக நபர் இன்று தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri