மதுபோதையில் கைகலப்பு - இருவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் மதுபோதையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன்,சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது மற்றும் 55 வயதுடையவர்களே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குவாதம் ஏற்பட்டமைக்கான காரணம்
காயமடைந்த இருவரும் வழக்கு ஒன்றிற்கு திருகோணமலை நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும்போது ஒன்றாக மது அருந்துவிட்டு வந்ததாகவும் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மதுபோதையில் இருப்பதாகவும் கடமை நேர வைத்திய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
