இலங்கையை அச்சுறுத்தும் பெரும் அனர்த்தம் - உயிர் அச்சுறுத்தலுடன் வாழும் மக்கள்
இலங்கையில் ஏற்பட்ட பேரிடனை அடுத்து மலையகத்தின் பல பகுதிகளில் ஆபத்தான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி மாத்தளையில் பகுதிகளிலுள்ள வீடுகளில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
கலுந்தேவல பகுதியைச் சேர்ந்த நிலந்த பிரேமகுமார என்பவரின் வீட்டின் தரையில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
வீட்டுக்குள் ஏற்பட்ட வெடிப்பு
இரவு 8.30 மணியளவில், தனது பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த போது, வீட்டில் டைல்கள் திடீரென வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் சுவர்கள் பல இடங்களில் வெடித்து விரிசல் ஏற்பட்டதனை காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதி மக்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள பல வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் இருந்த ஒரு கழிப்பறையும் தாழிறங்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீதிகளில் வெடிப்பு
இது தொடர்பாக அப்பகுதியின் கிராம அலுவலருக்கு தகவல் அளித்த பின்னர், சம்பவத்தின் புகைப்படங்களைக் கொண்டு வருமாறு கிராம மக்களிடம் கேட்டுள்ளார்.

அதற்கமைய, இந்த விடயத்தில் விரைவான விசாரணை நடத்தி, என்ன நடக்கிறது என்பதை தெளிவுபடுத்துமாறு கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்ற மலையகத்தின் பல பகுதிகளில் வீடுகளில் வெடிப்பு ஏற்படுவதும், வீதிகளில் வெடிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தை சீர்குலைத்த டித்வா புயலின் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும் மக்கள் கடும் அச்ச நிலையில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan