மட்டக்களப்பில் இரு விபத்து சம்பவங்கள் பதிவு
மட்டக்களப்பில் இன்று (07) அதிகாலை இரு வேறு விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பாதணி விற்பனை நிலையம் ஒன்றினுள் சம்பவதினமான இன்று காலையில் ஏற்பட்ட பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தடன் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
அதேவேளை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த மீன் ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று வீதி கட்டுப்பாட்டை மீறி பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலை முன்பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வாகன சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதை அடுத்து இந்த சம்பவங்களை அடுத்து மக்கள் பெரும் பதற்றமடைந்தனர்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
