திருகோணமலையில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்கள்: இரு நபர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு
திருகோணமலையின் இரு பகுதிகளில் இன்று (14) ஏற்பட்ட எதிர்பாராதவிதமான விபத்துக்களால் இரு நபர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதற்கமைய, திருகோணமலை - பாலையூற்று பகுதியில் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான வாகனம் ஒன்று தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உரிய நடவடிக்கை
இந்த விபத்தில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்துடன் வான் ஒன்று மோதியதில் வானின் சாரதி உயிர்தப்பியுள்ளார்.
இந்நிலையில், குறித்த பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறும் நிலையில் அதற்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பாதுகாப்பினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானையின் தாக்குதல்
அதேவேளை, புல்மோட்டை - ஜின்னா நகர் பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளான நபரொருவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த 35வயதான ஒரு பிள்ளையின் தந்தையான நெய்னா லெப்பை முகம்மது அஸ்பர் என்பவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
புல்மோட்டை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானை உட்புகுந்து பல சேதங்களை செய்து வருவதாகவும் கடந்த சனிக்கிழமையும் புல்மோட்டை அரபாத் நகர் மற்றும் நூராணியா நகர் பகுதிக்குள் புகுந்த யானை வீடொன்றில் உள்ள பொருட்களை சேதம் செய்துள்ளதோடு தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயிர் வகைகளையும் சேதம் செய்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |