டுவிட்டருக்கு இனிமேல் புதிய தோற்றம்: அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்
டுவிட்டர் செயலியின் சின்னம் மற்றும் பெயரை சமீப காலத்தில் மாற்றியிருந்த அதன் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தற்போது மற்றுமொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது X என கூறப்படும் இந்த செயலியில் "வெகு விரைவில் டார்க் மொட் (DARK MODE) மட்டுமே இருக்கும்" என எலான் மஸ்க் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
This platform will soon only have “dark mode”. It is better in every way.
— Elon Musk (@elonmusk) July 27, 2023
டுவிட்டர் தளத்தில் தற்போது பயனர்கள் லைட் (LIGHT MODE) மற்றும் டார்க் மொட் இனை (DARK MODE) பயன்படுத்தலாம்.
பயனர்களுக்கு அதிருப்தி
இது தவிர டிம் மொட் (DIM MODE) இதில் உள்ளது. எலான் மஸ்க் கூற்றுப்படி டார்க் மொட் ஐ தவிர்த்து ஏனைய இரண்டும் விடைபெறும் என அறியமுடிகிறது.
இது சில டுவிட்டர் பயனர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதேவேளை தற்போது (Android) செயலிகளிலும் புதிய சின்னம் மாற்றப்பட்டுள்ளது.
திறன்பேசி செயலிகளில் நேற்று வரை இருந்த நீலக் குருவி ஒரேயடியாக மறைந்து, எக்ஸ் சின்னமாக மாற்றம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |