உக்ரைன், ரஷ்யாவில் விளம்பரங்கள் ரத்து! டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு
உக்ரைன், ரஷியாவில் விளம்பரங்கள் ரத்து செய்யப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன்,வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த போர் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமையினால் சமூக வலைத்தளங்கான டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொதுபாதுகாப்பு தகவல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் டுவிட்டர் தளத்தில் விளம்பரங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் அறிக்கையொன்றினை வெளியிட்டு “முக்கியமான பொதுப் பாதுகாப்பு தகவல்கள் உயர்த்தப்படுவதையும், விளம்பரங்கள் அவற்றை திசை திருப்பாமல் இருப்பதையும் உறுதிசெய்ய உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் விளம்பரங்களை தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம்” என்றும் கூறியுள்ளது.