பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஊடுருவிய பிரித்தானிய இளைஞருக்கு நேர்ந்த கதி
சுமார் 130 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒஉட்பட 130 டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து தம்வசம் வைத்துள்ளார்.
ஜோசப் ஜேம்ஸ் கானர் (Joseph James O'Connor) எனும் 24 வயது பிரித்தானிய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் தன்னை இணையதளத்தில் PlugWalkJoe என விமர்சித்துள்ளார்.
சிறை தண்டனை
ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் மொடல் அழகி கிம் கர்தாஷியன் (Kim Kardashian), எலோன் மஸ்க் (Elon Musk), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), பராக் ஒபாமா (Barack Obama) மற்றும் பில் கேட்ஸ் (Bill Gates) ஆகியோரின் கணக்குகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் தனது சைபர் தாக்குதலை ஒப்புக்கொண்டதையடுத்து, நியூயார்க் பெடரல் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஜோசப் தனது குற்றங்கள் அர்த்தமற்றவை என்று கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |