பேசுபொருளாகியுள்ள த.வெ.க தலைவர் விஜயின் கடிதம்
இந்திய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஆணையம்
இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக முன்னதாக நடந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
— TVK Party HQ (@TVKPartyHQ) November 15, 2025
இதையடுத்து, எஸ்.ஐ.ஆர். தொடர்பான மற்றும் இதர கட்சி கூட்டங்களுக்கு தவெகவையும் அழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இவ்விடயம் இந்திய அரசியல் களத்தில் பேருபொருளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |