விஜயின் காணொளி அழைப்பு.. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய், இதுவரை குறைந்தது ஐந்து குடும்பங்களுடன் பேசியுள்ளதாக தவெக தரப்பினர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உரையாடலின் போது, விஜய் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் கரூர் நகருக்கு விரைவில் வருகை தந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.
மக்களுக்கு அழைப்பு
கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி அன்று கரூரில் விஜய்யின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மற்றும் குறைந்தது 60 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்த மறுநாள், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபா 20 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபா 2 இலட்சமும் இழப்பீடு வழங்குவதாக விஜய் அறிவித்தார்.
அது மாத்திரமன்றி, தவெக தலைவர் விஜயின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணமும் நிறுத்தப்பட்டதுடன் அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது விஜய் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தை காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
