முதலமைச்சர் விஜயின் திடீர் முடிவால் குழப்பத்தில் ஓடிய உதயநிதி
விஜய் தலைமையிலான தவெக அரசு மீது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று(13.5.2026) சட்டசபையில் நடைபெற்றது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பான்மை இல்லாத அரசு என தவெகவை விமர்சித்திருந்தார்.
இந்திய வரலாற்றிலேயே பிளவுபட்ட கட்சியில் இருப்பவர் வேறு கட்சிக்கு செல்வதற்கு முன்பாகவே ஆதரவு தரவேண்டும் என கேட்பது இதுதான் முதல்முறை எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் விஜய் தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன என எதிர்க்கட்சித் தலைவரின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக பங்கேற்காது.வெளிநடப்பு செய்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்
இந்த விடயம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.இது தொடர்பான விரிவாக தகவல்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.
ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார்.. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் - சுப்பிரமணியம் தெரிவிப்பு