பெருந்துயரமாக மாறிய விஜயின் கரூர் பிரசார கூட்டம்: பல்வேறு தலைவர்கள் இரங்கல்
கரூர் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைமைகள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் இன்று முன்னெடுத்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
மோடி இரங்கல்
இந்தநிலையிலே, உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
The unfortunate incident during a political rally in Karur, Tamil Nadu, is deeply saddening. My thoughts are with the families who have lost their loved ones. Wishing strength to them in this difficult time. Praying for a swift recovery to all those injured.
— Narendra Modi (@narendramodi) September 27, 2025
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை இரங்கல்
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பாஜக தலைவர் கே.அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக அரசும், தமிழக பொலிஸாரும் எந்த முன்னேற்பாடும் இல்லை என்று அவர் கடுமையாக சாடினார்.
இந்த துயர சம்பவம் குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோருகிறார்.
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச்…
— K.Annamalai (@annamalai_k) September 27, 2025
ஸ்டாலின்
கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.
அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும், பொலிஸ் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
பழனிசாமி இரங்கல்
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



