நீண்டநாட்களுக்கு பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு! அளித்த வாக்குறுதிகள்..
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் மக்களை நேரில் சென்று இன்று(23) சந்தித்துள்ளார்.
பொது இடத்தில் விஜய் மக்களை சந்தித்து பேசினால் அதிகம் பேர் திரண்டு வருகிறார்கள் என்பதால் இதற்கு உரிய அனுமதி பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு விஜய் உள் அரங்கில் மக்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதன்படி காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடன் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
விஜய்யின் மக்கள் சந்திப்பு
இதற்காக சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள கூட்ட அரங்கில் உள் அரங்கு நிகழ்ச்சியாக விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இன்று விஜய்யை சந்தித்து பேசுவதற்காக 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். இவர்கள் அனைவரும் இன்று காலை 7 மணியில் இருந்தே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர்.
விஜய்யை சந்திக்க வருபவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
உங்கள் அரசவைப் புலவர்கள் யாராவது இருந்தால் கைக்குட்டை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். சட்டசபையில் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் த.வெ.க. மேல்தான் அவதூறு பரப்புகிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்தா... அது என்ன வந்தா... வருவோம்... மக்கள் நம்மை கண்டிப்பாக வரவைப்பார்கள்.

மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வழிவகை செய்யப்படும். வீட்டிற்கு ஒரு மோட்டார் வாகனம் இருக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழக பாட திட்டத்தை மாற்ற வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும். வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பை முடித்திருக்க வழிவகை செய்யப்படும். சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக வைத்து அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சந்திப்பு
மேலும், அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்?
மிகப்பெரிய மனவேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

தனிப்பட்ட முறையில் தி.மு.க. மீது எந்த வன்மமும் இல்லை. மக்களை பொய் சொல்ல ஏமாற்றி ஆட்சி வந்த தி.மு.க.வை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்?
த.வெ.க.விற்கு கொள்கையில்லை என பேசுகிறார் தமிழக முதலமைச்சர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என கூறிய த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam