புடினை காத்திருக்க வைத்து பலி தீர்த்துக்கொண்ட துருக்கியே ஜனாதிபதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கியே ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடனான சந்திப்பிற்கு முன்னதாக தனிமையில் காத்திருந்த காணொளி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
பெப்ரவரி பிற்பகுதியில் உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்து, நேட்டோ கூட்டணித் தலைவருடன் புடின் நடத்திய முதல் சந்திப்பு ஈரானில் நடைபெற்றது.
... pic.twitter.com/oyTubLlJtA
— Christo Grozev (@christogrozev) July 19, 2022
எவ்வாறாயினும், துருக்கியே ஜனாதிபதி எர்டோகன் ரஷ்ய தலைவருடனான சந்திப்பிற்கு தாமதமாக வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புடின் சந்திப்பு நடைபெறவிருந்த அறைக்குள் நுழைந்தார், எனினும், அவரை வரவேற்க யாரும் அங்கு இருந்திருக்கவில்லை.
புடின் தனது நாற்காலி மற்றும் நாடுகளின் இரண்டு கொடிகளுக்கு முன்னால் 50 வினாடிகள் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவரது கைகளைக் கட்டிக்கொண்டும், வாய் முறுக்கிக் கொண்டிருப்பதையும், துருக்கியே ஜனாதிபதி வருவதற்கு முன்பு அவரது நிலைப்பாட்டை மாற்றுவதையும் காணொளி காட்டுகின்றது.
புடின் காத்திருக்க வைப்பதில் பெயர் பெற்றவர்
புடின் உலகத் தலைவர்களை (சிலர் மணிக்கணக்கில்) காத்திருக்க வைப்பதில் பெயர் பெற்றவர்.
2020ஆம் ஆண்டு மொஸ்கோவில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு எர்டோகன் ரஷ்யத் தலைவரால் இரண்டு நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தது. தற்போது அதற்கு பலி தீர்க்கப்பட்டதாக துருக்கியே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புடின் தன்னை சந்திக்க வரும் உலக நாட்டு தலைவர்களை மணி கணக்கில் காக்க வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், உக்ரைன் போருக்கு பின்னால் புடின் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.