இலங்கையிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்கு தடை விதித்துள்ள முக்கிய நாடு
இலங்கையிலிருந்து பயணிக்கும் விமானங்களுக்கு துருக்கி அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இலங்கை மற்றும் ஐந்து நாடுகளிலிருந்து பயணம் செய்யும் விமானங்கள் துருக்கிக்குள் பிரவேசிப்பதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், பிரேஸில், தென் ஆபிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து துருக்கி பயணம் செய்யும் விமானங்களுக்கு துருக்கி தடை விதித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவுகை காரணமாக நாட்டின் எல்லைகளையும் துருக்கி மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri