ஐவரை கத்தியால் குத்தி அதனை நேரலை செய்த துருக்கிய இளைஞர்
வடமேற்கு துருக்கிய நகரமான எஸ்கிசெகிரில் (Eskisehir) திறந்தவெளி விருந்தகம் ஒன்றில் அமர்ந்திருந்த ஐந்து பேரை கத்தியால் குத்தி, அதனை காணொளி எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அர்டா கே என அடையாளம் காணப்பட்ட இந்த 18 வயது இளைஞன், இந்தத் தாக்குதலை தனது மார்பில் பொருத்தப்பட்ட புகைப்பட கருவி மூலம் சமூக ஊடகங்களில் நேரலை செய்துள்ளார்.
தலைநகர் அங்காராவிற்கு மேற்கே 140 மைல் தொலைவில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் வசிப்பவர்கள், மசூதியில் தொழுதுவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நீதிமன்றத்தின் தடை
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட படத்தில், குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டபோது, இரண்டு கத்திகள் மற்றும் ஒரு சிறிய கோடரியை அவர் வைத்திருந்தமையை காண முடிந்தது.
நவ - நாஜிகளுடன் தொடர்புடைய கறுப்பு சூரியன் சின்னம் கொண்ட ஒரு ஆடை, மண்டையோடு அச்சிடப்பட்ட காற்சட்டை ஆகியவற்றையும் அவர் அணிந்திருந்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் முறையே 87, 71, 57, 64 மற்றும் 64 வயதுடையவர்கள். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்த சம்பவம் பற்றிய விபரங்களை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஒரு மாதத்தின் பின்னர் கணவரின் மரணத்தை அறிந்து கொண்ட கிளப் வசந்தவின் மனைவி! உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |