நேட்டோ தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விசித்திர நினைவுப்பரிசு: அதிர்ச்சியில் தலைவர்கள்

Turkey NATO
By Kamal Jul 10, 2026 01:37 AM GMT
Report

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வழங்கிய நினைவுப்பரிசு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வழக்கமான நினைவு பரிசில்களுக்கு பதிலாக, செயல்படும் பழமையான ரிவால்வர் துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் அடங்கிய பரிசுப் பெட்டியை அவர் வழங்கியுள்ளார்.

துருக்கியின் பாதுகாப்புத் துறையின் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந்தப் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேட்டோ தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விசித்திர நினைவுப்பரிசு: அதிர்ச்சியில் தலைவர்கள் | Turkey S Leader Gives Revolvers

ஒவ்வொரு தலைவருக்கும் அவர்களது பெயர் பொறிக்கப்பட்ட, 1990-களில் துருக்கியின் MKE நிறுவனம் தயாரித்த அரிய "Gumusay .357 Magnum" ரிவால்வர் மரப்பெட்டியில் வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பெட்டியில் துருக்கி தேசியக் கொடி, நேட்டோ சின்னம் மற்றும் "எங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ரிவால்வர் வகை கைத்துப்பாக்கி" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிசு பல நாடுகளின் தலைவர்களிடையே சுவாரஸ்யமான சூழ்நிலைகளை உருவாக்கியது.

பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், மாநாட்டிலிருந்து நாடு திரும்பிய பிறகே தனது பயணப்பையில் உண்மையான துப்பாக்கியும் தோட்டாக்களும் இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்தார். பின்னர் அவர் அந்தத் துப்பாக்கியை பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய காவல்துறையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

போலந்து ஜனாதிபதிக்குக் கிடைத்த ரிவால்வர் தற்போது சுங்க அனுமதிக்காக வார்சா விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் பாதுகாப்பான இடத்தில் நினைவுப் பரிசாகவே பாதுகாக்கப்படும் என்றும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்."இதைக் கொண்டு யாரும் சுடப்போவதில்லை" என்றும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் பிரதமர்களுக்குக் கிடைத்த துப்பாக்கிகள் அந்நாடுகளின் அங்காரா தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நெதர்லாந்தின் துப்பாக்கி செயலிழக்கச் செய்யப்படவுள்ள நிலையில், ஸ்வீடனின் துப்பாக்கி இறக்குமதி அனுமதிக்காக காத்திருக்கிறது.

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது ரிவால்வரை அரசின் அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களுடன் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தனது துப்பாக்கியை இராணுவ அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.

அதேபோல் கிரேக்க பிரதமரும் அதை ஏதென்ஸ் போர் அருங்காட்சியகத்திற்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி, "நான் கொடுத்த மேப்பிள் சிரப் பரிசு இதனுடன் ஒப்பிடும்போது மிகவும் சாதாரணமாகத் தெரிகிறது" என்று நகைச்சுவையாகக் கூறினார். தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஏற்கனவே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், அது கனடாவின் தேசிய போர் அருங்காட்சியகத்தில் இடம்பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகளவில் துப்பாக்கி ஏற்றுமதியில் அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ள துருக்கி, தனது ஆயுத உற்பத்தித் திறனை வெளிப்படுத்தும் விதமாக இந்த வித்தியாசமான நினைவுப்பரிசை வழங்கியிருப்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US