தூக்கத்திலேயே மண்ணில் புதையுண்ட உயிர்கள்! உயிரிழந்த குழந்தைகளுக்கு கடைசி பரிசு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியின் இறப்பு எண்ணிக்கை 41,000-ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
345,000 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அழிக்கப்பட்டு, இன்னும் பலரைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரிழந்த குழந்தைகளுக்கு கடைசி பரிசு
சிரியாவில், ஏற்கனவே பல ஆண்டுகால போரினால் பேரழிவிற்குள்ளான நிலையில், 5,800க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில்1 மில்லியன் மக்கள் கூடாரங்களிலும் தற்காலிக தங்குமிடங்களிலும் வாழ்கின்றனர். 80,000 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஒவ்வொரு குழந்தையின் நினைவாக, இடிபாடுகளின் மீது சிவப்பு வண்ண பலூன்கள் கட்டி பறக்கவிடப்பட்டுள்ளன.
ஹாடே நகர கட்டட இடிபாடுகளில் தென்படும் கம்பிகளின் மீது பலூன்களை கட்டி பறக்கவிட்ட தன்னார்வலர்கள், ஒவ்வொரு பலூன்களை கட்டும்போதும் இதயம் வலிப்பதாகவும், இது, உயிரிழந்த குழந்தைகளுக்கு தாங்கள் கொடுக்கும் கடைசி பரிசு எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நிலநடுக்கத்தில் வீட்டை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 5 வயது சிறுமிகு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட வைத்து தன்னார்வலர்கள் உற்சாகப்படுத்தியுள்ளனர்.
நிலநடுக்க அதிர்ச்சியில் இருந்த மீளமுடியாத சிறுவர், சிறுமிகளுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றனர்.





நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
