நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! கதிகலங்க வைக்கும் பலி எண்ணிக்கை - துருக்கி நிலநடுக்கம்
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,000ஐ கடந்துள்ளது.
துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,642 ஆக உயர்ந்துள்ளதுடன், சிரியாவில் 5,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐ.நா. துருக்கியின் ஹடேயில் மீட்புக் குழுவினர் 278 மணிநேரம் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த 45 வயதுடைய நபரை உயிருடன் மீட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குடும்பத்தை விட்டுப்பிரிந்த 1,589 குழந்தைகளை துருக்கி அரசு பராமரித்து வருகின்றது.
சிரியாவில் நிலநடுக்கத்தால் சுமார் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்நாட்டு மக்களுக்கு சுமார் 400 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலநடுக்கத்திற்கு காரணமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணை செய்வதாக துருக்கி அரசு உறுதியளித்துள்ளதுடன்,100 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்களை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.