துருக்கியில் மீண்டும் பாரிய நிலநடுக்கம்
துருக்கியின் - மாலத்யா மாகாணத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள யெசிலியுர்ட் நகரத்தில் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஹ்ரமன்மாராஸில் தொழிற்சாலை கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 69 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிறுவகத்தின் தலைவர் செசர் தெரிவித்துள்ளார்.
3 வாரங்களில் தொடர் நிலநடுக்கம்

துருக்கியில் கடந்த 3 வாரங்களில் இடம்பெற்ற நிலநடுக்கங்களால் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், துருக்கி - நிக்டே மாகாணத்தில் நேற்று முன்தினமும் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam