உலக நாடுகளை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்! திடீரென இரண்டாக பிளந்த விமான ஓடுதளம்
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,100-ஐ கடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.
இதனிடையே நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாத காலம் அவசர நிலை அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் இதுவரை 5,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் மீட்பு பணியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இடிபாடுகளை அகற்றி உயிருடன் இருப்போரை காப்பாற்ற முயற்சி செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொடும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர் தொடர்ந்து கண்டெடுத்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
விமான சேவை பாதிப்பு
இந்நிலையில், துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமான சேவைகள் முடங்கியுள்ளதுடன், பிளவுபட்டிருக்கும் விமான ஓடுதளத்தை காட்டும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலநடுக்க பாதிப்புகள் குறித்து அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேரை துருக்கி பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கமைய, உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிரும் மக்களின் முகவரி மற்றும் இருப்பிடத் தகவல் உடனடியாகக் கண்டறியப்பட்டு, உதவிகளை செய்வதற்காக ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் துருக்கி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை பிரகடனம்
இந்நிலையில், நிலநடுக்க பாதிப்பு காரணமாக மூன்று மாதம் அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரண உதவி வழங்கி வருவதாகவும், துருக்கி நாட்டுக்கு, தேவையான உதவிகளை செய்ததற்காக, இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
