துருக்கியில் நில அதிர்வினால் உயிரிழந்தவர்களுக்கு தொலைபேசி ஊடாக ஜனாதிபதி இரங்கல்
துருக்கியில் நில அதிர்வினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.
தொலைபேசி ஊடாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற பாரிய நில அதிர்வினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இந்த நெருக்கடி நிலையில் இலங்கை துருக்கிக்கு உதவிகளை வழங்கும் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இலங்கை மக்கள் துருக்கி மக்களுக்கு உதவிகளை வழங்க ஆயத்தமாக உள்ளனர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சேத விபரங்கள் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் உயிரிழப்பு ஏண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
