இலங்கை அரசாங்கத்துக்கு கொழும்பில் வைத்து அழுத்தம் கொடுத்த ஐ.நா.ஆணையாளர்!
இலங்கை அரசாங்கம், போர்க்கால உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
தண்டனையிலிருந்து விலக்கு
அத்துடன், போரின் போது தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பிரச்சினையை இலங்கை தீர்க்க வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற சந்திப்புக்களின் போது, வோல்கர் டர்க், இந்த வலியுறுத்தல்களை விடுத்துள்ளார்.
இலங்கை தற்போது தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில், மிகக் கடுமையான குற்றங்களைச் செய்தவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
