சிங்கப்பூரிலிருந்து லண்டன் சென்ற விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட குழப்பம்! பணிப்பெண்கள் காயம்
சிங்கப்பூரிலிருந்து லண்டன் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் குலுங்கி நிலை தடுமாறியுள்ளது.
பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் வங்க கடல் மீது 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது மோசமான வானிலை காரணமாக இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பணிப்பெண்கள் இருவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், விமான பணிப்பெண்கள் 5 பேர் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர்.
விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
இதனை தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விமான நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், விமானம் தாமதமானதற்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் விமானம் குலுங்கும் நிகழ்வுகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
