காதர் மஸ்தான் தலைமையில் துணுக்காய் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது துணுக்காய் பிரதேச செயலகத்தில் இன்று (15.02.2024) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
அபிவிருத்திக்குழுக் கூட்டம்
துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன் விவசாயம், காணி, வனவளத் திணைக்களம், நன்னீர் மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வெள்ள பாதிப்புக்கள் மற்றும் பயிர் அழிவுகள் தொடர்பாகவும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
