இஸ்ரேலியர்களுடனான தொடர்பை தடை செய்ய ஆயத்தமான நாடு
துனிசியாவுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இஸ்ரேலுடனான இணக்கமான உறவை குற்றமாக்கும் சட்ட மசோதா குறித்து துனிசியா விவாதிக்கிறது.
இஸ்ரேலியர்களுக்கும் தங்களுக்குமான தொடர்பை தடை செய்யும் மசோதா குறித்த விவாதத்தில் துனிசியா இறங்கியுள்ளது.
தேசத்துரோகம்
இதன்மூலம் ஜியோனிஸ்ட் அமைப்பை அங்கீகரிப்பது அல்லது அதனுடன் நேரடி அல்லது மறைமுக உறவுகளை ஏற்படுத்துவது தடை செய்யப்படும்.
இந்த வரைவானது ஜியோனிஸ்ட் உடன் நேரடி அல்லது மறைமுக உறவுகளை நிறுவுவதல் என்பது உயர் தேசத்துரோகம் என வகைப்படுத்தப்படும் குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'The Crime of normalisation' குற்றம் நிரூபிக்கப்பட்ட எவருக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 முதல் 100,000 தினார் அபராதம் விதிக்கப்படலாம் என்று இந்த வரைவு கூறுகிறது.
மீண்டும் இந்த குற்றத்தை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். கூடுதலாக, இந்த மசோதாவானது துனிசியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான எந்தவொரு தொடர்புகளையும் தடைசெய்யும்.
இதில் நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் ஆகியவை அடங்கும்.