சுனாமி பேபி அவரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தினார்(Photos)
சுனாமி பேபி அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்படடவர்தான் அபிலாஷ்.
அபோது இந்த ஆண் குழந்தைக்கு 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.
அபிலாஷை அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அழைக்கப்பட்டு வரப்படுகின்றது. பின்னர் மரபணுப்பணு பரிசோதனை மூலம் மட்டக்களப்பு - குருக்கள் மடத்தைச் சேர்ந்த ஜெயராசா தம்பதியினரது என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அபிலாஷிக்கு 17 வயது. அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபில் இன்று பெற்றோர் உறவினர்களுடன் இணைந்து சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் தாம் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துவதாக அபிலாஷ் தெரிவித்தார்.
இதன்போது அவரது இல்லத்திற்கு வருகை தந்திருந்த வடக்கு, கிழக்கு ஒப்பனையாளர்
சங்கத்தினால் சுனாமி பேபி அபிலாஷின் கல்விச் செலவுக்காக ஒருதொகை
நிதியுதவியையும் வழக்கி வைத்தனர்.






அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
