21ஆவது சுனாமி நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று(26) காலை 9:30 மணியளவில் பொது நினைவு
தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.
இதில் மலர் மாலையினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர்
தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க அதனை
தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல்
தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், ஆகியோர்
அணிவித்து வைக்க தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது.
அஞ்சலி
தொடர்ந்து தேசிய கொடியினை
மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகைசுடரினை
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராமசேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம
நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு
அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது
அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என பல நூற்றுக்கணக்கானோர்
கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி பேபி
சுனாமி பேபியின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியில் அவரது
பெற்றோர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபி அபிலாஷின் இல்லத்தில்
அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியில் முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த
உறவுகளுக்காக அபிலாஷின் பெற்றோர் அஞ்சலியை இன்று வெள்ளிக்கிழமை(26.12.2025)
செலுத்தியுள்ளனர்.

தற்போது 21 வயதுடை சுனாமி பேபி 81 என அறியப்படும் ஜெயராசா அபிலாஷ் தனது உயர்
படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவரது இல்லத்தில்
பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் அவரது பெற்றார்
இன்று சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலதிக தகவல்-ருசாத்