மக்களுக்கு உண்மையை கூறுங்கள் -ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக மக்களுக்கு உண்மையை கூறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டின் உண்மை நிலைமை மக்களிடம் கூறுங்கள்
பிரதமர் தினேஷ் குணவர்தன, அலரி மாளிகையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒழுங்கு செய்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கிராமங்களின் கிளை சங்கங்களை அமைத்து கிராமத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துமாறும் நாட்டின் நிலைமை தொடர்பான உண்மை மக்களுக்கு கூறுமாறும் ஜனாதிபதி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
பொருளாதார கஷ்டங்களால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் மக்கள்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றங்கள் காரணமாக மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால், அவர்கள் ஆட்சியாளர்கள் உட்பட அரசியல்வாதிகள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலைமையிலேயே நாட்டு மக்களுக்கு நாட்டின் உண்மை நிலைமை எடுத்துக்கூறுமாறு ஜனாதிபதி ஆளும் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
