உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி விரைவில்! பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு(Video)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (13.06.2023) கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் பாரம்பரிய வைபவ வழிபாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை தெய்வீக சக்திகள் விரைவில் வெளிப்படுத்தும்.
உண்மையை மறைப்பவர்கள் நம்மை தவறாக வழிநடத்தலாம். ஆனால் நாங்கள் தவறாக வழிநடத்தப்பட மாட்டோம்.
உண்மையை மறைக்க முயற்சி
தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் தங்கள் சொந்தத் துரோகங்களைக் காட்டிக் கொடுக்கும் நிலையில், தெய்வீக உதவியுடன் உண்மை வெளிவரும்.
தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
மேலும் அமைச்சர்கள் தினமும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதோடு உண்மையை மறைக்கவும் முயற்சிக்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




