பொய்களை அடிப்படையாகக் கொண்ட ட்ரம்பின் சட்டவிரோதப் போர்!
அமெரிக்காவில், ஈரானுக்கு எதிராக முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஈரானிலிருந்து எந்த “உடனடி அச்சுறுத்தலும்” இல்லை என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு பதிலடி கொடுக்கத் திட்டமிட்டிருந்ததால், அதனைத் தடுக்க முன்கூட்டியே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
I just left a classified briefing with the Trump Administration about the war in Iran.
— Elizabeth Warren (@SenWarren) March 3, 2026
I was worried before, but I’m more worried now. pic.twitter.com/HoSWLVWrR8
அலி காமனெயி
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அலி காமனெயி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க செனட்டர் Elizabeth Warren, ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் நடந்த இரண்டாவது நாள் இரகசிய விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஈரான் தொடர்பாக எந்தத் திட்டமும் இல்லை. இந்த சட்டவிரோதப் போர் பொய்களை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் நாட்டுக்கு எதிராக எந்த உடனடி அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் இந்த போர் தொடங்கப்பட்டது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri