உக்ரைனுக்கு செல்லும் அதி தீவிர ஏவுகணைகள்.. ட்ரம்பின் புதிய ஒப்பந்தத்தால் அதிகரிக்கும் பதற்றம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கு புதிய ஆயுதங்கள் அனுப்புவதை உறுதி செய்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா, நேட்டோ உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விற்கவுள்ளது.
பின்னர் அவர்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடும்போது அவற்றை கியேவுக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தடைகள்
50 நாட்களுக்குள் சமாதானம் செய்யாவிட்டால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்யாவை ட்ரம்ப் எச்சரித்தார்.
அதேவேளை, உக்ரைனுக்கு ஆயுத உதவியையும் வழங்கவுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது அதி தீவிர ஆயுதங்களை வழங்க போவதாக தெரிவித்துள்ளார்.
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே உடனான சந்திப்பிற்குப் பிறகு வெள்ளை மாளிகைக்கு சென்ற ட்ரம்ப், மிகப் பெரிய ஒப்பந்தம் ஒன்றை ஒப்புக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
"அமெரிக்காவிலிருந்து பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்கள் வாங்கப்பட்டு, நேட்டோவிற்கு அனுப்பப்படும். மேலும் அது விரைவில் போர்க்களத்திற்கு விநியோகிக்கப்படும்" என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அதேவேளை, ரஷ்யா மீது கடுமையான நிபந்தனைகளை ட்ரம்ப் விதித்துள்ள நிலையில், புடினின் அடுத்த நகர்வு குறித்து சர்வதேச அரங்கில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
