ஈரான் அழிந்து விடும் என ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் அழிந்து விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டுக்கு மீண்டும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அணு ஒப்பந்தத்தில் உடன்படத் தவறினால், எதிர்காலத்தில் இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் இன்னும் அதிக அழிவுகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமாக ட்ரூத் Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில் , ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய தலைவர்கள் தங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை உணராது, அவர்கள் இப்போது இல்லாதவர்கள். இன்னும் மோசமான தாக்குதல்கள் வரவிருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
“ஏற்கனவே ஈரானில் மிகுந்த உயிரிழப்பும், சேதமும் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும், இன்னும் ஒப்பந்தத்தில் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தள்ளார்.
தொடரும் தாக்குதல்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கும். எனவே, இந்த அழிவைத் தவிர்க்க, ஈரான் உடனடியாக அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்,” என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய வாரங்களில், ஈரான் மற்றும் சர்வதேச சமுகத்தின் மத்தியில் அணுஆயுத ஒப்பந்தம் மீதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
எனினும், யுரேனியம் செறிவூட்டும் உரிமை தொடர்பாக ஈரான் வலியுறுத்துவது முக்கிய தடையாகத் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் தனது பதிவில், “இது ஈரானியர்களின் கடைசி வாய்ப்பு. உங்களிடம் இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் இருக்கலாம். ஒப்பந்தத்தில் இப்போது இணைக. இல்லையெனில், பழைய ஈரானிய பேரரசின் பெயர்தான் மீதமிருக்கும்; உண்மையில் எதுவும் இருக்காது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த உரை உலகளாவிய அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
