ஹமாஸ் ஆதரவு நாடுகளுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள், தான் பதவி ஏற்பதற்குள் விடுவிக்கப்படாவிட்டால் மத்திய கிழக்கில் உள்ள ஹமாஸ் ஆதரவு நாடுகள் பாரிய தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
புளோரிடாவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, காசா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் விளைவு ஹமாஸ் அமைப்புக்கு பாரிய சேதத்தை விளைவிக்கும் எனவும் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகவும் இந்த எச்சரிக்கையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பில், டிசம்பர் 2 அன்று அவர் பதிவிட்ட சமூக ஊடக இடுகையில், “தான் பதவியில் இருக்கும் நேரத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படாவிட்டால் அது மத்தியக்கிழக்கின் போக்கையே மாற்றும்” என்றார்.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.