ஈரான் அணு அல்லது போலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை உருவாக்கினால்.. ட்ரம்ப்பின் எச்சரிக்கை
ஈரான் மீண்டும் அணு அல்லது போலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை உருவாக்கினால், மற்றொரு பெரிய தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தரலாம் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் ஃப்ளோரிடாவில் நடந்த சந்திப்பின்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் புதிய இடங்களில் ஆயுத திட்டங்களை மீண்டும் தொடங்க முயல்கிறது என்றும், அமெரிக்கா, அதனை கண்காணித்து வருவதாகவும் ட்ரம்ப் கூறினார்.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்துக்கு செல்ல வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
இதில் சர்வதேச அமைதி படைகள் இடம்பெறும். இந்த நிலையில், ஹமாஸ் ஆயுதம் களைந்திடாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இஸ்ரேலிய கைதியின் உடல்
இதேவேளை, ஹமாஸ் ஆயுதம் களைவதை மறுப்பதால், மீண்டும் இராணுவ நடவடிக்கையை தொடங்கலாம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

அத்துடன், கடைசி இஸ்ரேலிய கைதியின் உடல் மீட்கப்படும் வரை, ரஃபா எல்லை திறக்கப்படாது என இஸ்ரேல் கூறியுள்ளது.
இதற்கிடையில் நேற்றைய(29) சந்திப்பின் போது, ஈரான், காசா, லெபனான், சிரியா மற்றும் துருக்கி தொடர்பான பிராந்திய பிரச்சினைகளும் பேசப்பட்டுள்ளன.