அணு ஆயுத திட்டத்தை கைவிட தயாராகும் ஈரான் - ஒப்புக்கொள்ளா விட்டால் தாக்குதல் - மீண்டும் மிரட்டும் ட்ரம்ப்
ஈரான் ஒரு உடன்பாட்டை மேற்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள் நாங்களும் ஒரு உடன்பாட்டை மேற்கொள்ள விரும்புகிறோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொலைபேசி உரையாடல்
எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்தது குறித்து அவர் கூறுகையில்,

“நாம் ஐந்து நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளோம். அது எப்படி செல்கிறது என்பதை பார்க்கலாம். அது நன்றாக சென்றால், இதை தீர்வு காண முடியும். இல்லையெனில், நாங்கள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்வோம்.
மேலும், ஈரானுடன் இன்று நாங்கள் ஒன்றாக பேசுவோம்; பெரும்பாலும் தொலைபேசி வழியாக இருக்கும். மத்திய கிழக்கில் உள்ள எங்கள் கூட்டாளிகள் அவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக கருதப்படுகின்றனர்.
அணு ஆயுத திட்டம்
டொனால்ட் ட்ரம்ப் அடுத்ததாக, அமைதிக்குப் பதிலாக ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட தயாராக இருக்கலாம் என சுட்டிக்காட்டினார்.
நாளை காலை, அவர்களின் நேரப்படி, 10 பில்லியன் டொலர் (சுமார் £7.5 பில்லியன்) செலவில் கட்டப்பட்ட அவர்களின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையங்களை நாங்கள் தாக்க திட்டமிட்டிருந்தோம் என்று அவர் கூறினார்.

அது மிகவும் பெரியதும் வலுவானதுமாக இருந்தது; பணத்திற்குக் குறைவில்லை. ஒரு தாக்குதலிலேயே அது அழிந்து விடும். அது முற்றிலும் சரிந்து போகும். அவர்கள் ஏன் அதை விரும்ப வேண்டும்?என்றும் அவர் தெரிவித்தார்.
“அதனால் அவர்கள் தான் எங்களை தொடர்புகொண்டார்கள்; நான் அழைக்கவில்லை. அவர்கள் தான் அழைத்தார்கள். அவர்கள் ஒரு உடன்பாட்டை விரும்புகிறார்கள்,” என்று ட்ரம்ப் கூறினார்.
ஈரானின் மின்சார - எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவ தாக்குதல்! ட்ரம்ப் சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஈரான் மறுப்பு
“நாங்களும் ஒரு உடன்பாட்டை செய்ய மிகவும் தயாராக இருக்கிறோம். ஆனால் அது ஒரு நல்ல உடன்பாடாக இருக்க வேண்டும்; இனி எந்தப் போரும் இருக்கக் கூடாது, அணு ஆயுதங்களும் இருக்கக் கூடாது,” என்றும் அவர் தெரிவித்தார்.

“அவர்களுக்கு இனி அணு ஆயுதங்கள் இருக்காது. அதற்கு அவர்கள் சம்மதிக்கிறார்கள். அந்த விஷயத்தில் எந்தத் தளர்வும் இல்லை; இல்லையெனில் எந்த உடன்பாடும் இருக்காது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை,அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை நாங்கள் மறுக்கிறோம்" என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam