ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு.. ஜனாதிபதி அநுரவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!
புதிய இணைப்பு
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரி விகித அறிவிப்பு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி அநுர குமாரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை உள்ளிட்ட மேலும் ஏழு நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி, அவர்களது நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரி கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பிலிப்பைன்ஸ், மொல்டோவா, ப்ரூனே, அல்ஜீரியா, லிபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
குறைந்த வரி
அமெரிக்க வர்த்தக துறையின் அறிக்கையின்படி, இலங்கை, மொல்டோவா, ஈராக் மற்றும் லிபியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட அளவைவிட குறைந்த வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், பிலிப்பைன்ஸ் மற்றும் ப்ரூனே நாட்டுகளுக்கான வரி அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்ஜீரியாவிற்கு விதிக்கப்படும் வரி விகிதம் 30% ஆக தொடர்கிறது. வரிக்குப் பின்னால் உள்ள காரணம் அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் நிலவும் வர்த்தக இழப்புகளை (trade deficits) குறைப்பதுதான் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என ட்ரம்ப் எழுதியுள்ள கடிதங்களில் தெரிவித்துள்ளார்.
“மற்ற நாடுகளின் கொள்கைகள், அமெரிக்க பொருட்கள் உலக சந்தையில் செல்லும் பாதையைத் தடுக்கின்றன. இதற்கு பதிலடி அளிக்க வேண்டிய நேரம் இது,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யுங்கள், இல்லையெனில் கூடுதல் வரிக்கு தயாராகுங்கள்,” என்று உலக நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
ட்ரம்ப் இதுவரை 21 நாடுகளுக்கு வரி தொடர்பான கடிதங்கள் அனுப்பியுள்ளார். இந்தப் பட்டியலில் விரைவில் மேலும் சில நாடுகள் சேரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு விதிக்கப்படவுள்ள 25 வீத வரி, அமெரிக்காவின் முக்கிய இறக்குமதி மூலநாடுகளாக உள்ள இந்த இரு நாடுகளின் பொருட்களின் விலையை நேரடியாக பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
