ஈரானின் புதிய தலைவர் உயிருடன் உள்ளார்.. ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஈரானின் புதிய உயர்மட்ட தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதாகவும் ஆனால் அவர் கடுமையான சேதங்களுக்கு உட்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானிய மதகுரு சபையால் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மொஜ்தபா கமேனி காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரால் அவரது முதல் கருத்துக்கள் வாசிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டுள்ளார்..
இதற்கிடையில், புதிதாக நியமிக்கப்பட்ட உயர்மட்ட தலைவர் லேசான காயமடைந்தார், ஆனால் அவர் உயிருடன் இருக்கின்றார் என புதன்கிழமை ஒரு ஈரானிய அதிகாரி கூறியுள்ளார்.

இதற்கு பிறகு. "மொஜ்தபா கமேனி அநேகமாக (உயிருடன்) இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் கடுமையான சேதங்களுக்கு உட்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஆனால் அவர் ஏதோ ஒரு வடிவத்தில் உயிருடன் இருக்கலாம், உங்களுக்குத் தெரியும்" என்று ட்ரம்ப் செவ்வி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மொஜ்தபா கமேனியின் தந்தை, நீண்டகால உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி, போரின் முதல் நாளில் பெப்ரவரி 28ஆம் திகதி அன்று கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி: ஓய்வூதியக் கணக்குகளில் அவசரத் தேவைக்காகப் பணம் எடுப்பவர்கள் அதிகரிப்பு
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri