ஜெர்மனி ஜனாதிபதிக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜெர்மனி ஜனாதிபதி ஃபிரீட்ரிச் மெர்ஸ் ஈரான் விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திவிட்டு, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் வாஷிங்டன் "அவமானப்படுத்தப்படுவதாக" ஜனாதிபதி மெர்ஸ் திங்கள்கிழமை விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனி ஜனாதிபதி தனது நேரத்தை ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், தனது சீர்குலைந்த நாட்டின் குடிவரவு மற்றும் எரிசக்தி பிரச்சினைகளைச் சரி செய்வதிலும் செலவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலை ஒழித்து உலகைப் பாதுகாப்பான இடமாக மாற்ற முயற்சிப்பவர்களுக்கு இடையூறு செய்வதை மெர்ஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஜெர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறுவது அல்லது வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இது நேட்டோ (NATO) கூட்டமைப்பிற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு நேரடியாகப் பதிலளிக்காத ஜனாதிபதி மெர்ஸ், வியாழக்கிழமை மன்ஸ்டரில் உள்ள ராணுவ முகாமிற்குச் சென்றபோது, அமெரிக்காவுடனான உறவு முக்கியமானது எனத் தெரிவித்தார்.
அதே சமயம், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராததைக் கண்டித்த அவர், சர்வதேசப் பிரச்சினைகளுக்கு நேட்டோ தலைமையிலான தீர்வுகளே சிறந்தது என்றும் வலியுறுத்தினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam